இலங்கை ஜனாதிபதி ரணிலின் இந்திய பயணமும் -தமிழ்தேசிய கட்சிகளின் கோரிக்கைகளும்-பா.அரியநேத்திரன்

இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது தமிழ்தேசிய கட்சிகள் இலங்கைப்பிரதமர் ரணில் அடுத்தவாரம் புதுடில்லி செல்லும்போது அதற்கு முன்னர் அவரை வலியுறுத்துமாறு கடிதம் எழுதும் படலம் தற்போது  பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது அல்லவா..?

அதில் 13, வது அரசியல் திருத்தத்தை மட்டும் நடைமுறைபடுத்தவேண்டும் என கடந்த 2023, ஐனவரில் ஆரம்பித்த  ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி (DTNA) கட்சியில் உள்ள ஐந்து கட்சிகளான.

  1. தமிழீழவிடுதலை இயக்கம்-தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
  2. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-தலைவர் சுரேஷ்பிரமச்சந்திரன்
  3. தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்-தலைவர்-த.சித்தாத்தன்.
  4. தமிழ் தேசிய கட்சி-தலைவர் என். ஶ்ரீகாந்தா.
  5. ஜனநாயகப்போராளிகள் கட்சி-தலைவர் இ.கதிர்.

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் பெறாத

  1. தமிழ் மக்கள் கூட்டணி-தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன். ஆகிய ஆறுகட்சிகள் ஒரு பேப்பரில் 13, ஜ அமுல்படுத்து மாறு கடிதம் எழுதி இந்திய தூதுவருடம் வழங்கியுள்ளனர்.

தமிழ்தேசிய மக்கள்முன்னணி-தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமஷ்டித்தீர்வை வலியுறுத்தி இந்தியப்பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஐயா பாரதப்பிரதமரிடம் அர்த்முள்ள அதிகாரப்பகிர்வாக சமஷ்டித்தீர்வை வலியுறுத்தியதான நிலையை நேற்று(13/07/2023) இந்தியத்தூதுவரிடம் வலியுறுத்தியதுடன் சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்க கடிதமும் அனுப்ப உள்ளனர்.

கவனிக்கவேண்டியது….!

மொத்தம் எட்டு தமிழ்தேசிய கட்சிகளில் ஆறு கட்சிகள், 13,வது திருத்தம் தொடர்பாகவும்,இரண்டு தமிழ்தேசிய கட்சிகள் சமஷ்டி தொடர்பாகவும் கடிதம் அனுப்பியுள்ளனர்

யார் இந்த எட்டு கட்சிகளும்..!

இவர்களில் புளட்டும் அதன் தலைவர் சித்தாத்தனும், தமிழ்மக்கள் கூட்டணியும் அதன்தலைவர் சி.வி.விக்கினேஷ்வரனும் தவிர்ந்த ஏனைய ஆறு கட்சிகள் என தம்மை அடையாளப்படுத்தும்..!

செல்வம் அடைக்கலநாதன்.

சுரேஷ்பிரமச்சந்திரன்.

என.ஶ்ரீகாந்தா,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

இரா.சம்மந்தன்

ஆகிய ஐவரும் 2001,அக்டோபர்,20, தொடக்கம் 2009, மே, 18, வரை தமிழ்தேசிய கூட்டமைப்புடன் செயல்பட்டவர்கள்.புளட்டும் அதன் தலைவர் சித்தாத்தனும் 2009, மே,18,க்கு பின்னர் 2011,மார்ச்,17, ல் வடமாகாண உள்ளுராட்சி சபை தேர்தலின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டவர்.

தமிழ் மக்கள் கூட்டணி என தற்போது புதிய கட்சியில் தலைவராக உள்ள சி.வி.விக்கினேஷ்வரன் 2013,செப்டம்பர்,21,ல் இடம்பெற்ற வடமாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின்மூலம் கொழும்பில் இருந்து தருவிக்கப்பட்டவர்.

2018,அக்டோபர்,24,ல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை தொடங்கியவர்.

தமிழ்தேசிய மக்கள்முன்னணி கஜேந்நிரகுமார் பொன்னம்பலம் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து 2010,பெப்ரவரி,10, ல் விலகி தமது பாட்டனாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை தேர்தல் கட்சியாக பயன்படுத்துபவர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தலைவர் சுரேசும் 2020,ஆக்ஸ்ட் ,05 வரையும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இயங்கி பின்னர் விலகியவர்கள்.

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்மந்தன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகவே உள்ளார்.

மேற்குறிப்பிட்ட தமிழ்தேசிய கட்சிகள் பற்றிய உண்மைகளை தெரிவித்திருந்தேன்..!

2009, மே,18, க்கு முன்னர் ஒற்றைக்கதிரையில் ஒருதலைவனை பார்த்த நாம் இன்று பத்து கதிரையில் பல தலைவர்களை பார்கிறோம் உறுதியான முடிவுகள் எடுக்க முடியாத தமிழ்தேசிய அரசிலிலாக இன்று மாறிவிட்டது.

பாரதப்பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் தற்போதய பிரதமர் நரேந்திர மோடி இருவருடனும் 2009, மே,18, க்கு பின்னர் முள்ளிவாய்க்கால் மௌனம் ஏற்பட்ட பின்னர் நான் அறிந்தவரை சுமார் ஐந்து தடவை தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் ஐயா தலைமையில் புதுடில்லி்சென்று இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயம், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இலங்கை இந்திய ஒப்பந்தம், 13, வது அரசியல் திருத்தம் எல்லாமே பேசப்பட்டது என்பதை அனைவரும் புரிதல் நல்லது.

இதோ இந்தியப்பிரதமர்கள் , தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசிய தினங்கள்..!

1)கடந்த 2010,யூலை மாதம் அப்போதய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்தேசியகூட்டமைப்பை அழைத்து பேசினார்,

2)கடந்த 2014,ஆகஷ்ட் 25ல் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தமிழ்தேசியகூட்டமைப்பை அழைத்து பேசினார்.

3)கடந்த 2016,மே மாதம் சம்மந்தன் ஐயாவும் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது

4)கடந்த 2018,செப்படம்பர் புது டில்லியில் சம்மந்தன் ஐயா மோடி சந்திப்பு இடம்பெற்றது

2019,யூண் 09 கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியபிரதமர் நரேந்திர மோடி சந்திப்பில் தமிழ்தேசியகூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் அண்மையில் உள்ள பிராந்திய வல்லரசு நாடான இந்தியா இலங்கைக்கு நட்புறவு நாடு, என்பதால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் இந்திய பிரதமர்களை முள்ளி வாய்கால் மௌனத்திற்கு பின்னர் கடந்த 14, வருடங்களாக அழுத்தம் கொடுத்த வரலாறுகள் உண்டு. தற்போது புதிய ஜனாதிபதி ரணில் புதுடில்லிக்கு செல்கிறார் அவர் மோடியை சந்திப்பதற்கு முன்னம் 13, ஐ வலியுறுத்தி கடிதம் வழங்கி அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஒருசாராரும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என இன்னோர் சாராரும் காகித அரசியலில் முயற்சிக்கின்றனர்.

என்னைப்பொறுத்தவரை இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்று 36, வயதை அடைகிறது. இந்தியப்பிரதமர்கள் யாராக இருந்தாலும் இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனூடாக இலங்கையில் நிறைவேற்றப்பட்ட 13, வது திருத்தம் பாரதப்பிரதமர் மொடிக்கு தெரியாத ஒன்றல்ல..! அதை அவர் எப்போதோ இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்கவேண்டும்..!

சரி இப்போது 36, வருடம் கடந்து தமிழ்தேசிய கட்சிகள் பாராதப்பிரதமரிடம் கேட்கவேண்டியது, எழுத்து மூலமாக வலியுறுத்த வேண்டியது இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை மட்டுமே..! இலங்கை அரசு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை தரமாட்டார்கள் என்பதற்காக தமிழ்தேசிய கட்சிகள் அதனை கேட்காமல் விடலாமா..!

சர்வதேச தலைமைகளை நோக்கி உறுதியான தீர்வை மட்டுமே தமிழ்தேசிய அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக வலியுறுத்துவதே காலத்தின் கட்டாயம்.

-பா.அரியநேத்திரன்-

15/07/2023