நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது ஆபத்தானது-அதிபர் ஜெலன்ஸ்கி 

நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது அபத்தானது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்து பார்த்தால் உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க தயாராக இல்லை என்று தெரிகிறது. 2008-ஆம் ஆண்டே நேட்டோவில் உக்ரைன் இணையும் என்று நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், எப்போது என்று அது குறிப்பிடவில்லை.

தற்போது வில்னியஸில் நடக்கும் நேட்டோ அமைப்பு நாடுகளின் மாநாட்டில் சில முக்கிய விஷயங்கள் உக்ரைன் இன்றி வாதிக்கப்பட உள்ளதாக எங்களுக்கு அறிகுறிகள் தெரிகின்றன. இந்த மாநாட்டில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நோட்டோவில் இணைவதற்காக அல்ல. நிச்சயமற்ற தன்மை என்பது பலவீனத்தை குறிக்கும். இதுகுறித்து வில்னியஸ் மாநாட்டில் நான் பேச இருக்கிறேன்” என்று  தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், வில்னியஸ் மாநாட்டில் உக்ரைனுக்கு நல்ல தகவல் கிடைக்கும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜின்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.