இலங்கையில்  அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்

இலங்கையில்  எய்ட்ஸ் நோயால் ஆண்கள் அதிகளவு  பாதிக்கப்பட்டு வருவதாக  தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது.

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதான பத்திரன தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் மொத்தம் 607 எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 44 சதவீதம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.