டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது-பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்

டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Image

அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் இந்தச் சிதைவுகளை முறையான பகுப்பாய்வு செய்வார்கள் என்று கடலோரப் படை தெரிவித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக கடந்த ஜூன் 18-ஆம் திகதி சென்ற 5 பேரும் இறந்தனர்.

இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன.