மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இரணுவத்தினர்

541 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட
கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோத அதில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த
கொள்ளைக்கோஸ்டியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைத்தூப்பியும் அதற்காக பயன்படுத்தப்படும் பத்து துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்
கொள்ளைக்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் மற்றும் மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் இணைந்துமேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இந்த கொள்ளைக்கோஸ்டியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கல்லடி பகுதியில் உள்ள முன்னாள் ஈபிடிபி உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் முச்சக்கரவண்டியில் சென்று வேவு பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டே இந்த கொள்ளைச் சம்பவங்களை திட்டமிட்டு மேற்கொள்வதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸ் பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.

இதன்போது கையடக்க தொலைபேசிகள் மற்றும் வீடுகளை உடைப்பதற்கான பொருட்களும் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நேற்று இரவு மூன்று வீடுகளை உடைத்து
கொள்ளையிடுவதற்கான திட்டங்களும் இவர்களினால் தீட்டப்பட்டுள்ளாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தார்.

Leave a Reply