1000 தொற்றாளர்களை எட்டியது வவுனியா-17 மரணங்கள் பதிவு

157 Views

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் அதன் தாக்கத்தினை செலுத்தியிருந்தது.

அந்தவகையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் 1040 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் அநேகமானவர்கள் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply