காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

36 Views

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலத்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில்   ஐந்து வயது பெண் குழந்தையும் அடக்கம் என்றும் பல காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் “உடனடி அச்சுறுத்தல்” வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply