05 வருடங்களுக்கு பிறகு சீனாவிற்கான விமான சேவையை தொடங்கிய இந்தியா…

கடந்த 5 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

அதன் பின்னர் 176 பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமானம் மீண்டும் விமானங்களை இயக்கியுள்ளது.

இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.