ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள அவர் ஈரான் தனது ஆட்புல ஒருமைப்பாடு,கௌரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவரை துணிச்சலானவர் என ஈரான் ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.
ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழுமையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.