வேகமாக பரவும் புதிய கொரோனோ வைரஸ்

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் புதிய வகையான கொரோனோ வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த வைரசின் பரவல் என்பது தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பு மருந்தின் பயன்பாட்டை மழுங்கடித்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1000 பேருக்கு மேல் இந்த புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதாரத் துறை செயலாளர் மற் கன்கொக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் தென் பகுதியில் உள்ள 60 இற்கு மேற்பட்ட உள்ளுர் பிரதேசங்களில் இது கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் மட்டுமல்லாது வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாக இவ்வாறான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது தற்போதைய வைரஸை விட மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.