வெளிநாட்டு உதவியுடன் முல்லையில் குடிநீர்த்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் NTL Norsk Tjenestemannslag  என்னும் நிறுவனத்தின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக நோர்வே பொருண்மிய மதியுரையகத்தின் (NORWAY TECH) இனுசரணையில் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தொகுதி வழங்கப்பட உள்ளது.