வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக 22ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாமல் உள்ளனர்.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக போராடி வரும் காணி உரிமையாளர்கள், காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வாரமும் போராட்டங்களை முன்னெடுப்பதாக முடிவெடுத்திருந்தனர்.
இம்முறை 22ஆவது வாரமாகவும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னடுத்தனர்.



