வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் வேண்டுகோள்

கடந்த வார ( 03-01-2021) இலக்கு மின்னிதழுக்கு, “விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்”  என்ற தலைப்பில்  வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தால் வழங்கப்பட்ட நேர்காணலில் தெரிவிக்கப்பட்டமைக்கு மேலதிகமாக அந் நிறுவனத்தின்  தலைவர் தமக்குத் தேவையான தொழிநுட்ப மற்றும் மனித வலுவுக்கான உதவி கோரல் தொடர்பாக விடுக்கும் வேண்டுகோள், இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,

“இன்றை நவீன தொழிநுட்ப உலகோடு பார்வையற்றவர்களையும் கூட்டிச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் பொதுவாகவே பார்வையற்றவர்களுக்குரிய தொழில்நுட்ப கருவிகளுக்கான கேள்விகள் குறைந்தளவே காணப் படுகின்றது. அதே சமயம் இத்தகைய கருவிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேதான் காணப்படுகின்றது.

பார்வையற்றவர்களுக்குரிய தொழில்நுட்ப கருவிகளை அரசாங்கமே பெற்றுக்கொடுக்கின்றன. இதனால் பார்வையற்றவர்களுக்காக தயாரிக்கப்படும் இலத்திரனியல் கருவிகள் மிகவும் விலையுயர்ந்ததாக காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எமது பார்வையற்ற பயனாளிகளால் இவற்றை பெற்றுக்கொள்ள இயலாது.

எனவே, சிந்தனையாளர்கள், உதவும் வசதியுடையவர்கள் பார்வையற்றவர்களுக்குரிய இத்தகைய இலத்திரனியல் கருவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். தகவல் தொழில்நுட்ப பயிற்சியளிப்பதற்கு தேவையான செலவீனத்தை பொறுப்பேற்க முன்வரவேண்டும்.” என்று கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

brail001 வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் வேண்டுகோள்

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.