வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டமாகாணங்களில் உள்ள அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரணதண்டனை விதித்ததாகவும், கடந்த மாதம்இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம்செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு கடும் தண்டணை வழங்க வேண்டும் என்றுஅதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகம் கடந்த மாதம்செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.