வடக்குக் கிழக்கிலே மக்கள் போராட்டத்தை நடத்த முடியாது -அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ்

இன அழிப்புக்கு பின்னர் போர் மௌனித்ததன் பின்னர் மக்கள் பல்வேறு விதமான சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்காலில் ராஜபக்ச அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இன அழிப்புக்கும் அதே போன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்காக பல்வேறு விதமான நிலைகளிலே சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் என கிழக்கு மாகாண பல்சமய அமைப்பின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழர்கள் முன்னெடுக்கும் இந்த சாத்வீகப் போராட்டங்களானது சர்வதேசத்தின் கவனத்திற்கு சென்று இந்த தமிழர்களுடைய பிரச்சனைகள் அதாவது இன அழிப்பாக இருக்கலாம், அரசியல் தீர்வாக இருக்கலாம் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பிரச்சினைகளாக இருக்கலாம் அரசியல் கைதிகள் நில ஆக்கிரமிப்பு போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளாக இருக்கலாம் அங்கு தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருக்கின்றது என்பதனை சர்வதேச கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் இனிய நிலையிலும் அது பேசு பொருளாக இருந்தது.

இந்த இரண்டு சட்டங்களையும் நாங்கள் பார்த்தோமானால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது எந்த போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாது அல்லது போராட்டங்களுக்கு மக்களை ஆயத்தப்படுத்த முடியாது. போராட்டத்தை முன்னெடுப்பவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களை வருட கணக்கிலேயே சிறை வைக்கலாம் ஆகவே இவ்வாறான நிலைகளிலே தமிழர்களுடைய போராட்டத்தை நசுக்குவது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பது பொதுவாக இந்த ஊடகவியலாளர்கள் மக்கள் நலன் சார்ந்து ஜனநாயகத்தின் உடைய நான்காவது தூண் எனப்படுகின்ற இந்த ஊடகத்துறையை அல்லது ஊடகவியலாளர்களை அரசு அநீதிகளுக்கும் அரசாங்கம் நடத்துகின்ற அடாவடிகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதற்கும் அல்லது அரசினுடைய உண்மை முகத்தை அநிதியை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் இவர்களுக்கு அந்த செயற்பாட்டை முன்னெடுக்காத வகையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இன்னமும் நாங்கள் ஆழமாக பார்த்தால் வடகிழக்கில் பல சவால்களுக்கும் பல இன்னல்களுக்கும் அரச அடக்குமுறைகளுக்குள்ளும் அரசு புலனாய்வாளர்களின் கழுகு பார்வையிலும் அவர்களுடைய பல்வேறு விதமான உள சித்திரவதைகளுக்கு உள்ளும் அவர்களுடைய உயிரை துச்சம் என மதித்து பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களுடைய அவர்களை அடக்குவதற்காக இந்த நிகழ்நிலைச் சட்டம் அரசாங்கத்திற்கு ஒரு உதவியாக இருக்கும்.ஆகவே இந்த இடத்தில் வடக்குக் கிழக்கிலே மக்கள் போராட்டத்தை நடத்த முடியாது போராட்டத்திற்கு ஒன்று கூட முடியாது.

அதேவேளை மக்களுக்கு பக்கபலமாக இருக்கின்ற ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் செயல்பட முடியாது அவர்களை அப்படியே நசுக்குகின்ற இந்த சட்டம்.

தமிழர்களுடைய உண்மையான உரிமை குரல் சாத்திகமான செயற்பாடுகள் ஜனநாயக செயற்பாடுகள் மேலெழும்பாதபடி அல்லது அவைகள் உருவாகாதபடி இந்த இரண்டு சட்டங்களும் நசுக்கி தங்களுடைய சாத்வீகத்தையும் உரிமை சார்ந்த போராட்டத்தையும் இந்த நூற்றாண்டிலே மிகப்பெரிய இன அழிப்பின் உடைய அந்த நீதியையும் அவை இல்லாமல் போகச் செய்து இன்று சர்வதேசத்திலும் சரி ஐ.நாவிலும் பேசுபொருளாக இருக்கின்ற தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளை இல்லாமல் செய்து வேறறுப்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

அந்த சட்டம் அதன் செயல்பாடுகள் இவ்வாறான வேலையை செய்து தமிழ் மக்களினுடைய இருப்பை இல்லாமல் செய்து பேரினவாதம் எவ்வாறு சிந்தித்ததோ தாயக கோட்பாட்டை சிதறடித்து அவர்களுடைய உரிமை கோட்பாட்டை சிதறடித்து தமிழர்களை தாங்கள் நினைத்தது போன்று இந்த முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலேயே இந்த இரண்டு சட்டங்களையும் பாவித்து நம்முடைய இருப்பை அடியோடு வேரறுக்க செய்கின்ற ஒரு கொடிய சட்டங்களாகத்தான் இது இருக்கும் என்பது மிக தெளிவாக கூறலாம்.