லெபனான் – இஸ்ரேல் மோதல் பெரும் போராக மாறும் ஆபத்து – ஐ.நா

தற்போது லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் மிகப்பெரும் போராக அந்த பிராந்தியத்தில் மாறும் சாத்தியங்கள் உள்ளன. எனினும் அதனை தடுப்பதற்கான கால அவகாசம் எம்மிடம் தற்போதும் உள்ளது என கடந்த செவ்வாய்க்கிழமை(08) நியூயோர்க் கில் உள்ள ஐ.நா தலமையகத்தில் உரையாற்றும்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரொனியோ குற்ரெரஸ் தெரி வித்துள்ளார்.

நான் கடந்த பல மாதங்களா கவே எச்சரித்து வருகின்றேன். மேற்கு கரையில் ஏற்பட்டுள்ள நிலை அங்கு ஒரு பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. லெபனானில் ஏற் பட்டுள்ள மோதல்கள் மிகப்பெரும் பிராந்திய போராக மாறும் ஏது நிலை களை ஏற்படுத்தியுள்ளது. அது முழுப் பிராந்தியத்தையும் ஆபத்தில் தள்ளியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஹிஸ்புல்லாக்களும், இஸ்ரேல் படையினரும் நீலக்கோட்டைத் தாண்டி மோதல்களில் ஈடு பட்டு வருகின்றனர். இது ஐ.நாவின் 1701, 1559 தீர்மானங்களை மீறும் செயலாகும். லெபனான் மற்றும் பெய்ரூட் நகர் மீது மேற்கொள்ளப் பட்டுவரும் தாக்குதல்களில் கடந்த வருடம் 2,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர். ஆனால் கடந்த இரு வாரங்களில் அங்கு 1,500 கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 300,000 மக்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். வடக்கு இஸ்ரேல் பகுதியில் 60,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். நாம் மிகப்பெரும் போர் ஒன்றை எதிர்கொண்டுள்ளோம். எல்லா நாடுக ளின் இறமையும் மதிக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.