ரோஹித ராஜபக்ஷவுக்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளது.

சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.