ரஸ்யாவிடம் இருந்து மேலதிக அணுசக்தி எரிபொருட்களை யும், உதிரிப்பாகங்களையும் 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்வதன் மூலம் தமிழ் நாட்டில் ரஸ்யா வின் உதவியுடன் கட்டப்பட்ட கூடாம் குளம் அணுமின் நிலையத்தை தரமுயத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகம் கடந்த செவ்வாய்க்கிழமை(13) தெரிவித்துள்ளது.
கூடாம்குளம் அணுமின் நிலையம் தற்போது இரண்டு மின் உற்பத்தி பிரிவுகளைக் கொண்டுள் ளது. அதன் மூலம் 1,000 மெகாவற் மின் உற்பத்தி செய்யப்படகின்றது. இந்த மின்சாரமே தமிழகத்தின் மின் தேவையையும், ஏனைய மாநிலங்களின் மின் தேவையையும் அதிகம் பூர்த்தி செய்கின்றன.
முதலாவது இரண்டு பிரிவுகளும் 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டு களில் கட்டப்பட்டன. அதன் பின்னர் மேலும் இரண்டு பிரிவுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற் போது மேலும் இரண்டு பிரிவுகளை கட்டுவதற்கு இந்தியா ரஸ்யாவின் உதவியை நாடியுள்ளது.
இதன் மூலம் 6,000 மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். ரஸ்யாவின் Rosatom என்ற நிறுவனம் இந்தியாவுக்கு தேவையான அணுசக்தி எரி பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்க வுள்ளது. அதற்கான பேச்சுக்களை இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த டிசம்பர் மாதம் ரஸ்யாவுக்கு சென்றபோது மேற்கொண்டிருந்ததாக அந்த ஊடகம் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.