ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்குமா? ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திக்கும் மகிந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் முயற்சியில் பெரமுன கட்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் அந்தக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

இதேசமயம், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, ரணில் – மகிந்த – பஸில் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பான விடயம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக இந்த சந்திப்பில் ரணில் – பெரமுன கட்சியின் கூட்டுப் பயணம் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று பேசப்படுகின்றது.