இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.” என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்ததாகவும் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.