மூதூரில் பழக்குடி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட தீர்வில்லை – ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இன மதம் மொழியால் வேறுபட்டாலும் பழங்குடி என்ற மக்களும் வாழ்கின்றார்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே சந்தனவெட்டை கிராமம் இக் கிராமத்தில் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

muthoor indenious4 மூதூரில் பழக்குடி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட தீர்வில்லை - ஹஸ்பர் ஏ ஹலீம்மூதூர் நகரில் இருந்து தொலைவில் அமையப் பெற்ற இக் கிராம மக்கள் பல்வேறு பின்னடைவுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமைகளாக காணப்படுகின்ற மனித அரசியல் சிவில் உரிமைகள் போன்றன இவர்களுக்கும் கிடைக்கப் பெறுவது அரிதாகவே காணப்படுகிறது.

இது தொடர்பான நிலையை கருத்திற் கொண்டு விழுது ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்கான “இளையோரின் குரல் “என்ற தொனிப்பொருளின் கீழ் நடமாடும் சேவையொன்று 21.11.2023 ந் திகதியன்று குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

பழங்குடி மக்களது ஜீவனோபாயமானது மிகவும் பின்னடைந்துள்ள நிலையில் சமூகமயமாக்கப்படாமை அம் மக்கள் அதற்குள் செய்வதறியாது தடுமாறுகின்றனர். அரச சேவையை பெறுவது முதல் பல இன்னோரன்ன சட்ட ரீதியான ஆவணங்களை பெற முடியாது வாழ்கின்றார்கள். இது தவிர பல விழிப்புணர்வற்ற நிலை காரணமாக பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் அங்கு இருந்து வருகின்றது.

பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பின்மை ,கல்வி,மந்தபோசனை,பால் நிலை சார்ந்த பல பிரச்சினைகளை தீர்க்கவும் சேவை வழங்குனர்களையும் வசதிப்படுத்தக்கூடிய வளங்களை இணைப்பு செய்ய கூடியதூமாக குறித்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

muthoor indenious மூதூரில் பழக்குடி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட தீர்வில்லை - ஹஸ்பர் ஏ ஹலீம்அன்றைய நடமாடும் சேவையில் சம்பூர் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு உத்தியோகத்தர்கள், மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பதிவாளர் கிளை மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தர்கள் மதஸ்தல உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரது ஒத்துழைப்புக்களோடு இடம் பெற்றதோடு பிறப்பு ,அடையாள அட்டை விவாக பதிவு போன்றன அம் மக்களுக்கான சேவைகளாக திறம்பட இடம் பெற்றது.

ஆரம்ப கட்டமாக பிள்ளையின் பிறப்பு முதல் பிறப்பு சான்றிதழ் கூட பலருக்கு இல்லாத நிலை இங்கு காணப்படுகிறது இளவயது திருமணம் அதிகரித்தும் காணப்படுகிறது இது போன்ற விழிம்பு நிலை மக்களின் துயர் துடைக்க பழங்குடி என்கின்ற மக்கள் என்பதை ஒதுக்காது சேவைகளை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பதே அம் மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார சீர்கேடு உட்பட ஆரோக்கியமான வாழ்வு தொடர்பான விழிப்புணர்வும் இதன் போது இடம் பெற்றதுடன் குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி பிரவீனா அவர்களால்  இளவயது திருமணம்,இளவயதில் கர்ப்பம் தவிர்த்தல், மந்த போசாக்கு போன்ற பல விடயங்களை அணுகுவதற்கு தங்களது களவிஜயத்தின் போது பெற்றார்கள் தங்களை அணுகுவதும் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். இது தவிர பாடசாலை இடைவிலகல் போன்றனவும் கல்வியில் பல பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது.

பல தரப்பட்டவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் அற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் இவ்வாறான நிலை இனிமேலும் இருக்கதக்கவாறான சேவை அம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமை அம் மக்களுக்கும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் இதற்காக துறைசார் அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும். இக் கிராம மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடக்கம் பல வீதிகள் உட்பட அபிவிருத்திகளிலும் புறக்கணிப்பு செய்யப்படுவதாக அம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

muthoor indenious2 மூதூரில் பழக்குடி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட தீர்வில்லை - ஹஸ்பர் ஏ ஹலீம்ஏனைய சமூகத்துடனான உறவாடல் இன்றிய நிலையில் பழங்குடி என்ற நிலைக்குள் வாழ்க்கை நடாத்தினாலும் இம் மக்களின் சகல உரிமைகளும் சுதந்திரங்களுடனும் வாழ வைக்க வேண்டும். பல்வேறுபட்ட இக் கட்டான சூழ் நிலை இம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது நாட்டில் ஏற்பட்ட அண்மைய பொருளாதார நெருக்கடி உட்பட தற்போது வரை பல கஷ்டங்களுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

“பல வருட காலமாக அடையாள அட்டை இன்றி காணப்பட்ட நான் தற்போது இந்த நடமாடும் சேவை மூலமாக விண்ணப்பித்துள்ளேன் இதன் மூலம் அடையாள அட்டை கிடைக்கும் என நம்புகிறேன் இது தொடர்பில் முன்னர் எப்படி பெறுவது என்று தெரியாமலும் இருந்தது எனவே இந்த விழுது நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என நடமாடும் சேவையின் மூலம் பயனடைந்த குறித்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

வளங்களை இணைப்புச் செய்வதன் மூலமும் மக்களுக்கான அரச சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை விழுது போன்ற இளையோருக்கான குரல் எடுத்துக்காட்டியுள்ளது .மக்கள் பிரச்சினைகளை சமுதாய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக தீர்க்க முயற்சி எடுக்க முடியும் அது போன்ற கட்டமைப்புக்களை இக் கிராமத்தில் வலுப்படுத்த வேண்டும்.

கிராம அபிவிருத்தி சங்கம்,மகளிர் அபிவிருத்தி சங்கம் உட்பட பல அமைப்புக்களின் வலுவூட்டல் மூலமாக மக்களை விழிப்புணர்வுள்ளவர்களாக மாற்றியமைத்து அவர்களது உரிமைகளுக்கு செவிமடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

“பலருக்கு இந்த கிராமத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லை இதன் மூலமாக கிடைக்கும் என நம்புகிறேன் இது போன்று இன்னும் பல சேவைகளை இங்கு செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்” என குறித்த கிராமத்தின் பெண்மணி அவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். தங்களது தேவை கருதி மூதூர் நகருக்கு செல்வதாயின் பல கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டும் என்பதுடன் சீரான போக்குவரத்து வசதியின்மையும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சிறுபான்மை இன தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகள் சரியாக சமமாக மதிக்கப்பட்டு செயற்படக்கூடியவாறு இருக்க வேண்டும்.

இம் மக்களின் வாழ்வும் ஏனைய மக்களின் வாழ்வும் வித்தியாசமானது இது தொடர்பில் தேவை நலன் கருதி துரிதமான சேவைகளை அம் மக்கள் எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.