முஸ்லீம்களின் சட்டங்களை மாத்திரம் இலக்கு வைக்க முடியாது – அத்துரலிய தேரருக்கு நீதியமைச்சர் பதில்

முஸ்லீம்களின் சட்டங்களை மாத்திரம் இலக்குவைக்க முடியாது என நீதியமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே சட்டம் என்பதை பின்பற்ற வேண்டும் என்றால் ஏனைய மதங்களினால் பின்பற்றப்படும் சட்டங்களையும் நீக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல தனிப்பட்ட மத நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர், கண்டி திருமண மற்றும் விவகாரத்து சட்டம் யாழ்ப்பாண தேசவழமை சட்டம் ஆகியன காணப்படுகின்றன என  தெரிவித்துள்ளார்.

ஒருமதத்தினது சட்டங்களை மாத்திரம் நீக்கமுடியாது என தெரிவித்துள்ள நீதியமைச்சர், பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவற்றில் மாற்றங்களை கொண்டு வரலாம் அல்லது இலங்கையில் காணப்படும் தனியார் சட்டங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.