கடந்த 2025 நவம்பர் இறுதியில் வீசிய டித்வா புயல், மற்றும், மழை வெள்ளம் மண்சரிவால் நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 627க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 6,164 வீடுகள் முழுமையாகவும் 112,110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் மக்கள் பாதிக்கப்பட்டு, பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள், வீடுகளுக்கு சேதம், மற்றும் மின் தடைகள் போன்றவற்றை ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டின, இந்தியா மீட்புப் பணிக ளுக்கும், மறுசீரமைப்புக்கும் நிதி உதவி அளித்தது. பாதிக்கப் பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் வாழ் வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப் பட்டது.
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வின் கீழ், தாக்கம் ஏற்படக்கூடிய வலயங்களில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மக்களுக்காக 8,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத் தைக் குறைப்பதற்காக வடிகாலமைப்புப் பொறிமுறைகளை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் உள்ளிட்ட தரப்பினர்களுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட சுமார் 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரம் குழந்தைகள் அடங்குகின்றனர். நிலச் சரிவு வெள்ளம். காரணமாக நாடு முழுவதும் சுமார் 1200 இடங்களில் நிலச்சரிவுகள், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வீடுகள் பயிர்கள் சேதம்: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிந்தன, விவசாயப் பயிர்களுக்கும் பெரும் சேதம் நாடுமுழுவதும் ஏற்பட்டது. கொழும்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை உள்பட வடக்கு கிழக்கு அடங்கலாக 17 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புக்களுக்காக பல நாடுகள் இலங்கை க்கு உதவிகளை வழங்கியது.
மீட்பு மற்றும் நிவாரண உதவிகள், சர்வதேச உதவி கள், ஐக்கிய நாடுகள் சபை, சீனா உள்ளிட்ட நாடுகளின் நிதி மற்றும் உதவிகள் இலங்கைக்கு கிடைத்தன. இந்தியா மீட்புப் பணிகளுக்கு உதவியதுடன், மறு சீரமைப்புக்கு ரூ. 4,050 கோடி நிதியுதவி அளித்தது.
இலங்கைக்கு 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் வழங்கிய நிவாரணப் பொருட்கள் குறித்த விரிவான புள்ளிவிபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் காணமுடிந்தது. 13 நாடுகளிடமிருந்து 2161 தொன் உணவுப் பொருட்கள் பெறப்பட்டு, அவற்றில் 1800 தொன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 5 நாடுகளிடமிருந்து 26.5 தொன் மருந்து பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சீனா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளிடமிருந்து 14,750 கூடாரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியா 75 வாகனங் களை (பெரிய லொறிகள், நீர் பவுசர்கள் மற்றும் குப்பை சேகரிக்கும் லொறிகள்) வழங்கியுள்ளது.
உதவிப் பொருட்கள் மட்டுமன்றி, மீட்புப் பணிகளுக் காக 7 நாடுகளிலிருந்து 89 நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 80 நிபுணர்கள் தேடுதல், மீட்பு மற்றும் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கட்டங்களில் ஏறக்குறைய 22, நாடுகள் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், ஓமான், ரஷ்யா, துருக்கி, சிங்கப்பூர், டென்மார்க், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, மியான்மர், பங்களாதேஷ், ஜெர்மனி,நெதர்லாந்து.பிரான்ஸ், கத்தார், மாலைத்தீவுகள் ஆகிய 22, நாடுகள் இணைந்து உலக உணவுத் திட்டமும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி யுள்ளது.
டித்வா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரண மாக கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் வயல் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய பணிப் பாளர் எம்.எஸ்.றினூஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டமை தொடர்பில் கடந்த மாத இறுதியில் என்று போடலாம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகா ணத்தில் மொத்தமாக 21, 272 ஹெக்டேயர் நி லப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அடிப்படையில் பார்க்கின்ற போது திருகோணமலை மாவட்டத்தில் 15,389 ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட 23516 விவசாயிகளும், மட்டக்களப்பில் 2961 ஹெக்டேயரை சேர்ந்த 5009 விவசாயிகளும், அம்பாறையில் 2922 ஹெக்டேயரை சேர்ந்த 5115 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும் பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப் பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சா லைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எனவே இப்போதுதான் ஐன வரிமாதம் தொடங்கி 10 நாட்கள் முடிவடைகிறது. இது முன் னெடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனர்த்தம் இடம்பெற்று சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைத்துள்ளதாகவும், வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடம் முடிவதற்குள் தமக்கான வீட்டை அமைத்துக்கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அரச தரப்பு அமைச்சர்கள் கூறி வருகின்ற னர்
எவ்வாறாயினும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு இதுவரை உரிய முறையில் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த அனர்த்தத்தின்போது மலையகத்தைச்சே ர்ந்த மகமன்கடவல குளம் பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய தமது வீடுகளுக்கு, இதுவரை 25,000 ரூபா அடிப்படை இழப்பீடு கூட கிடைக்கவில்லை என மஹமன்கடவல கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வெள்ளம் காரணமாக அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மலையகம், மற்றும் வடகிழக்கில் உள்ள மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைந்தாலும் இன்னும் ஏனைய கட்டு மானம், மற்றும் விவசாய அழிவுகளுகளுக்கான கொடுப் பனவுகள் பூரணமாக வழங்கப்படவில்லை. அதற்கு இன்னும் காலதாமதம் ஏற்படும் என்பதே உண்மை.
இயற்கை அனர்த்தம் தொடர்பாக வழமையாக எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் அரசை குறை கூறுவது தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுள்ள நிலையில், துரிதமாக மீள்கட்டுமாணப்பணிகளை செய்யவேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.



