06. ‘இலங்கை சிறைச்சாலையில் உள்ள மீனவர்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தி தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (28) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தங்களது விடயத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்’ என்றும் இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
‘தங்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என இந்திய கடற்றொழில் அமைச்சர் உறுதியளிக்கும் வரையில் தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்’ என்றும் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



