மாவீரர் நாள் பொதுக்கூட்டம்- தவிசாளருக்கு எதிராக பி அறிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருவதாக கூறி அவருக்கு எதிராக பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து வருவது தொடர்பாக புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அதனோடு இணைந்த வர்த்தமானி அறிவித்தல்கள், கொரோனா சுகாதார ஏற்பாடுகளை மீறாதவகையில் செயற்பட வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இவ் வழக்கில் சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகினர். சட்டத்தரணிகள் இன்று வரையில் தவிசாளர் அப்படியொரு பொதுக்கூட்டத்தினையும் ஏற்பாடுசெய்யவில்லை எனவாதிட்டனர். அதேவேளை ஏதாவது ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்வதாயின் சட்டதிற்கு உட்பட்டு சுகாதார அனுமதிகளுடனேயே மேற்கெற்கொள்ளப்படும் எனவும் மன்றில் உத்தரவாதமளிக்கப்பட்டது.

இந்த இடத்தில் பொலிசாரினால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொலிசாரின் குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ளது.