மன்னார் தீவில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி திட்டத்துக்கு அனுமதி

மன்னார் தீவில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி திட்டத்துக்கு அனுமதிமன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 4.7 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டு 6 காற்றாலை இயந்திரங்களை
நிர்மாணிப்பதன் மூலம் மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 2020.10.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆனாலும், அரசின் வெளிநாட்டு கடன் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தும்வரைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியைப் பயன்படுத்துவதற்கு இயலாது.

அதனால், 20 வருடகால தொழிற்பாட்டுக் காலப்பகுதியுடன் நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல், மற்றும் நடைமுறைப்படுத்தலின் கீழ் போட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறையின் முதலீட்டாளர்கள் மூலம் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.