“மத ஆட்சி வேண்டாம், ஜனநாயகம் வேண்டும்” – போராட்டத்தில் சிரியா மக்கள்! 

மதச்சார்பற்ற ஜனநாயக சிரியாவிற்கு அழைப்பு விடுத்து சிரியாவின் மத்திய டமாஸ்கஸில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அசாத்தின் ஆட்சி கவிழ்ந்த பின், கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கிய நிலையில், பெண்களை உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசை அமைக்க போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“50 ஆண்டுகளாக இருந்த கொடுங்கோன்மை ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதால் சிரியாவில் ஜனநானய ஆட்சி தேவை” என்பதே அவர்களது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.