மட்டக்களப்பில் வேட்பாளர் நியமனம் ;கூட்டமைப்பிடம் வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்புத் தலைமைகளுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக தமிழரசுகட்சி தலைமைகளுடன் தனித்தனியாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததாக மட்டக்களப்பு சிரேஷ்ட ஊடகவியலாளர் சாமித்தம்பிரவீந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று 01/03/2020 தமதுதொலைபேசிமூலமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர்மாவை.சேனாதிராசா, பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், இலங்கை தமிழரசு கட்சி சிரேஷ்டதலைவர்களான பொ.செல்வராசா, சீ.வி.கே.சிவஞானம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சீ.யோகேஷ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மண்முனை தென் எருவில்பிரதேச தமிழரசு கட்சி தலைவர் மா.நடராசா ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி மூலமாக இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் தேர்தலில் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கு தமிழரசு கட்சி மூலம் மட்டக்களப்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் தெரிவை பொறுத்தே அது அமையும் எனவும் குறித்த ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியதாகவும் தெரியவருகிறது.unnamed மட்டக்களப்பில் வேட்பாளர் நியமனம் ;கூட்டமைப்பிடம் வேண்டுகோள்

அத்துடன் வேட்பாளர்கள் கடந்த காலத்தில் உறுதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக செயல்பட்டவர்களாகவும் உறுதியானவர்களாகவும் சோரம் போகாதவர்களாகவும் இருக்கவேண்டும் என தான் அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

கடந்த 2012, மகாணசபைதேர்தல், 2015, பொதுத்தேர்தல்களில் பேரினவாத கட்சிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள், அரசாங்க கட்சி அமைப்பாளர் பதவிகளை வகித்தவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்புவேட்பாளர்களாக யாரும் நிறுத்தப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் மட்டுமே பெறக்கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கருத்துக்களை அவதானமாக செவிமடுத்த சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுமந்திரன், துரைராசசிங்கம், சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவு முற்றுப்பெறவில்லை பல விண்ணப்பங்கள் மட்டக்களப்பில் இருந்து தமக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் மட்டக்களப்பில் உள்ளதமிழரசு கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்பே வேட்பாளர் விபரங்களை வெளியிட முடியும் எனவும்தாம் கூறிய ஆலோசனைகளை கவனத்தில் எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்ததாக ஊடகவியலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ரெலோ சார்பாக இருவரும், புளட்சார்பாக ஒருவரும் ஏற்கனவேநியமிக்கப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி சார்பாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர் இவர்களில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன் ஆகிய இருவருடன் இன்னும் மூன்று வேட்பாளர்கள் நியமிக்கப்பட வுள்ள நிலையில்13, விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.