போரில் அங்கவீனமுற்ற தனது படையினரையும் கைவிட்டது சிறீலங்கா அரசு

இந்தியா மற்றும் மேற்குலகத்தின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போரின் போது சிறீலங்கா அரசு பெருமளவில் சிங்கள இளைஞர்களை பயன்படுத்தியிருந்தது.

போரின் உக்கிரம் மற்றும் விடுதலைப்புலிகளின் வீரம் செறிந்த தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கமுடியாது ஏறத்தாள ஒரு இலட்சம் சிங்களப் படையினர் தமது ஆயுதங்களைப் போட்டுவிட்டு சிறீலங்காவில் இடம்பெற்ற 30 வருடப்போரில் தப்பியோடியபோதும், கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை அறிவித்து சிறீலங்கா அரசு பெருமளவாள சிங்கள இளைஞர்களை அவசர அவசரமாக இராணுவத்தில் இணைத்து 2009 ஆம் ஆண்டு போரை நிறைவு செய்திருந்தது.

disab soldiers போரில் அங்கவீனமுற்ற தனது படையினரையும் கைவிட்டது சிறீலங்கா அரசுஆனால் இறுதிப்போரில் பல ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதுடன், 30000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. அவர்களில் பலர் அவயவங்களை இழந்தவர்கள். ஆனால் அவர்கள் தற்போது தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும் எனத்தெரிவித்து கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.