பொது வேட்பாளா் பாதகமான நிலையை ஏற்படுத்தும் – முன்னணியின் பேச்சாளா் சுகாஷ்

IMG 20240526 WA0154 பொது வேட்பாளா் பாதகமான நிலையை ஏற்படுத்தும் - முன்னணியின் பேச்சாளா் சுகாஷ்ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். அல்லது பகிஷ்கரிப்பை செய்ய வேண்டும். இரண்டில் ஒன்றினை தெரிவு செய்தாலும் பொது வேட்பாளரை நியமித்தால் எமக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

“ஜனாதிபதி தேர்தலில் ரணில்,சஜீத்,அநுர குமார சில வேலைகளில் பொன்சேகா, தம்மிக்க பெரேரா, சம்பிக்க ரணவக்க ஆகியோர்கள் போட்டியிடலாம் ஆனால் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பெற்றுத் தரக்கூடியவர்கள் இவர்களில் யாருமில்லை. இதனால் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். இல்லாது போனால் பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் மூன்றுக்கு மேறுபட்டவர்கள் போட்டியிட்டால் ஒன்றை பொது வேட்பாளருக்கு வாக்களித்து மற்றதை சிங்கள பௌத்தர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.

இதன் மூலம் பாதகத் தன்மைகளையே சிறுபான்மை சமூகம் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த தேர்தலின் போது சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அவர் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வாக கிராம சபையை இந்தியாவில் போன்று பஞ்சாயத்து முறையை கூறியிருந்தார். மஹிந்த ராஜபக்ச தீர்வு அவரை நம்ப முடியவில்லை.

இது போன்று அநுர குமார திசாநாயக்கவும் கூறியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு தான் வரவில்லை. தேசிய மக்கள் சக்தி சார்பில் படித்த புத்திஜீவிகளான பேராசிரியர்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகளை அனுப்புகிறேன் என கூறி அவரும் வரவில்லை. எனவே தான் எவரும் எமது கருத்தை கேட்க தயாரில்லை. இவைகளை வைத்து பார்த்தால் எல்லோரும் ஒன்று தான் பெயர்கள் தான் வித்தியாசம் சாத்தான் பேய் பிசாசு என்ற நிலை தான் உள்ளது.

சமஷ்டி தீர்வு தான் எங்களுக்கு தேவை. ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர்களால் விலை போக முடியாது என உத்தரவாதம் தரமுடியுமா? இரு நாட்களில் தமிழர்களுக்கு தீர்வு தருகிறோம் எனவே ரணிலுக்கு வாக்களியுங்கள். எனக்கு தொலை பேசி அழைப்பு மூலமாக இதனை அவர் சொன்னார் என்ற மாதிரி சம்மந்தன் ஐயா சொல்லும் கதை போல் இருக்கும்.

பொது வேட்பாளர் பற்றி பேசியவர்கள் ஜனாதிபதி ரணிலுடன் அவர்களது மாளிகைக்குள் சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்தன் போன்றவர்கள் உள்ளார்கள். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வாக பொது வேட்பாளரை நிறுத்தினால் அதன் பாதகத்தை பார்க்கவும் அல்லது பகிஷ்கரிப்பு என்றவற்றை பார்த்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.