பேஸ்புக் கணக்குகள் குறித்து தினமும் 200 முறைப்பாடுகள்

தங்கள் பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி பேஸ்புக் கணக்குகளை அகற்றுமாறு கோரி கணினி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று அந்தப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போலி பேஸ்புக் கணக்குகளை அகற்று மாறு கோரி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் படி பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.