பெரும்பான்மையைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வா? சம்பந்தன் எதிர்ப்பு

அரசு தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மை வெற்றியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சி பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 20ஆவது திருத்தச் சட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“எனவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 20ஆவது திருத்தத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் நாட்டைப் பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயல்பாட்டுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காது” என்றார்.