பெருந்தோட்டங்கள் இந்தியாவிற்கு சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது – மருதபாண்டி ராமேஷ்வரன்

பெருந்தோட்டங்கள் இந்தியாவிற்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவால் மலையகத்திற்கு 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டன. அந் நாட்டின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

அதே நேரம் பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் எண்ணம் இல்லை. சீனாவுக்கும் வழங்கப்படாது.  இலங்கை உள்விவகாரங்களை  வெளிநாடுகளுக்கு  கொண்டு செல்வது சரியில்லை. பிரச்சினைகளை இங்கு பேசி தீர்க்க வேண்டும். ஜெனிவா மாநாடு என்பதெல்லாம் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்”. என்றார்.