பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு

கஞ்சிகுடியாறு குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் ஒன்று ஆரப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், அன்புநெறி (USA) நிதி உதவியுடனும் Assist RR(SL) அனுசரனையுடனும் IMHO USA and Pladge to Restore என்ற அமைப்பின் ஒருங்கிணைப்புடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் பிரதேச செயலாளர், கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள், தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள், கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் இவர்களுடன் Assist RR இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

24 11 2020 இன்று மதியம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டமான திலாப்பியா மீன் குஞ்சுகள் 50000 பிரதேச செயலாளர் திரு கஜேந்திரன் தலைமையில் கஞ்சிகுடியாறு குளத்தில் விடப்பட்டது.

3 பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு

ரூபாய் 125,000.00 பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும்.

இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84  உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர்.

மறைமுகமாக 350 குடும்பங்களும் , 5 மீன் வியாபாரிகளும், சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

*ரூபேஷ், சாகாமம், விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல்.

*மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல்.

*சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும்.

1 164 பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு

*தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல்.

*புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல்.

*ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல்.

*சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார்.

*வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல்.

*குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்கான அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.

(மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்)

*நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.

*நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல்.

*மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல்.

*மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல்.

*தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல்

2 4 பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு

*திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல்.

இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.