பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் தன்பேர்க்கை கைது செய்தது சுவீடன்

இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் நிலையில் சுவீடனின் கொர்பன்கெயின் பல்கலைக்கழகம் தொடர்ந்து இஸ்ரேலிய பல்கலைக் கழகங்களு டன் தொடர்புகளை பேணி வருவதற்கு எதிராக இந்த வாரம் கொர்பன்கெயின் பல்கலைக்கழ கத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போதே சூழலியலாளர் கிரேட்டா தன்போர்(21) உட்பட ஆறு பேரை சுவீடன் காவல்துறையினர் கடந்த புதன் கிழமை(4) கைது செய்துள்ளனர்.

சூழல் மாசடைவதை தடுக் கும் விழிப்புணர்வுப் போராட்டங்களை அவர் மேற்கொண்டபோதும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர் போராடியபோதும் பல தடவைகள் பல நாடுகளில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர் ஆக்கிரமிப்புக்கு எதி ரான மாணவர் அமைப்பு என்ற அமைப்பின் போராட்டத்தில் கலந்துகொண்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். கொர்பன்கெயின் பல்கலைக்கழகத்தில் 20 இற்கு மேற்பட்டவர்கள் போராடியபோதும் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான படுகொலைகளுக்கு எதி ராக உலகின் பல நாடுகளில் மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தமது பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்