பாலஸ்தீன அமைப்புக்களை ஒருங்கிணைத்தது சீனா

பலஸ்தீன மக்களின் விடு தலைக்காக போராடிவரும் பல அமைப்புக்களை மூன்று நாட்
கள் மேற்கொண்ட தீவிர பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் ஒரு அணியில் சீனா இணைத்துள்ளது.
தேசிய ஒருமைப்பாடு என்ற உடன்பாட்டில் ஹமாஸ் மற்றும் பற்றா என்ற பிரதான அமைப்புக்கள் உட்பட 14 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(23) கைச்சாத் திட்டுள்ளன. தமக்கிடையிலான வேறுபாடுகாளை கைவிட்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக இந்த அமைப்புக்கள் இணைந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளன.
தன்னாட்சி அதிகாரம், தேசிய ஒருமைப்பாடு, காசா போரின் பின்னரான புனர்வாழ்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து சீனாவின் தலைநகர் பிஜீங்கில் இடம்பெற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்
பட்டுள்ளது. பற்றா மற்றும் ஹமாஸ் அமைப் புக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. ஆனால் அவை கைகூடவில்லை.
காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இடம்பெறும் போர் மற்றும் தாக்குதல் கள் இந்த அமைப்புக்களிடம் ஒரு ஒற்றுமை ஏற்படுவதற்கான அழுத்தங்களை தோற்று வித்துள்ளது என கட்டாரை தளமாகக் கொண்ட உலக விவகாரங்கள் என்ற சிந்தனைப் பள்ளியின் அதிகாரியான ஒமார் ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.
கடந்த 9 மாதங்களாக காசா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 39,000 கொல்லப்பட்டதுடன், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர். ஏறத்தாள 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.