முன்மொழியப்பட்டுள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” தொடர்பான திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவின் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட வரைவை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிவிப்பின்படி, திருத்தப்பட்ட இந்த சட்டவரைவு மேலதிக சட்டத்துறை பரிசீலனைகளுக்காக சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு உத்தியோகபூர்வ பரிசீலனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் இந்த புதிய சட்ட வரைவு நீதி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன தலைமையிலான 17 பேர் கொண்ட துறைசார் நிபுணர்கள் குழுவொன்றினாலேயே இந்த சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.



