கொரோனா தொடர்பில் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன்.

இன்று நாட்டிற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள கொரோனா எனப்படும் cove 19 வைரஸ் பற்றிய பல செய்திகள் சமூக வலை தளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன .

கொரோனா என்பது ஒரு முடிவில்லாத தொடக்கமோ என்று எண்ணும் அளவுக்கு நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து செல்கின்றது .இது தொடர்பான பல வகையான விழிப்புணர்வுகளும் ஆராட்சி கட்டுரைகளும் வெளியிடபட்டு கொண்டிருந்தாலும் இன்னும் இந்த வைரஸ் இன் பூரண தன்மையையும் , தாக்கும் வீரியத்தையும் ,கட்டுப்படுத்தும் மருந்துகள் என்பன பற்றி ஒரு தெளிவான முடிவு இல்லை என்பதே உண்மை .

சுகாதார பிரிவினர் கூறுவது போல Stay at Home என்பது ஒன்றே கொரோனா தொற்றை , பரவலை தடுக்கும் ஏற்று கொள்ள கூடிய ஒரு முறையாக இருக்கின்றது .
இன்று லாக் டவுன் மூலம் மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளின் தேவைகளும் சீர் குலைந்து உள்ளது .

இதில் முக்கியமான ஒன்றுதான் வைத்திய தேவை .இன்று பெரும்பாலான தொற்றா நோய்களான நீரழிவு , குருதி அமுக்கம் ,சிறுநீரக நோய்கள் என்பன கொரோனா எனும் கொடிய நோயினால் மறைக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் முக்கியத்துவம் இழந்து வருகின்றது என்றால் மிகையாகாது .எமது நாட்டு மக்களை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று தான் சிறுநீரக நோய்கள் .

இந்த நோய் தந்த அல்லது தந்து கொண்டிருக்கும் அழிவுகளை நாம் இலகுவில் மறந்து விட முடியாது .
இந்த நோய்க்கான பல்வேறு திட்ட்ங்கள் நடைமுறையில் இருந்த போதும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் பெரும்பாலானவை இஸ்தம்பித்து உள்ளது .சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் அல்லர் இரத்த சுத்திகரிப்பு முறைகள் ( Dialysis )தொடர்ச்சியாக நீண்டகாலம் தடை இன்றி பின்பற்ற வேண்டும் .

சீரான முறையில் மருந்துகள் உட்க்கொள்ளாத பட்சத்தில் சிறுநீரகங்கள் விரைவில் தொழிட்பாட்டை இழந்து மீள தொழிற்பட முடியாத நிலையை அடைந்து விடுகின்றன .இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மிக குறைந்த மனித வளத்திலும் அரச வைத்தியசாலைகள் தமது அன்றாட கிளினிக் வசதிகளை வழங்கிவருகின்றது .
எனவே சிறுநீரக நோயாளர்கள் தங்களது பிரேதச வைத்திய வைத்தியசாலைகளை அணுகி தங்களது மருந்துகளை தொடர்ச்சியாக பெறுவதுடன் இரதமாற்று முறைகளையும் பின்பற்றுவது அவசியம் ஆகின்றது .

உங்கள் கிளினிக் புத்தகத்தை , வைத்திய சான்றிதழ்களை காண்பிப்பதன் மூலம் ஊரடங்கு வேளையிலும் இந்த சேவைகளை பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோன வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாக தாக்கும் என்பதும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடன குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்பதும். குறிப்பிடத்தக்கது .

எனவே தொடர்ச்சியாக சிறுநீரக நோய்க்கான மருந்துகளை
பாவிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் .