நயினை, அனலை, நெடுந்தீவில் இந்திய உதவியில் மின் திட்டம் – உடன்படிக்கை நேற்று கைச்சாத்து

302 10 நயினை, அனலை, நெடுந்தீவில் இந்திய உதவியில் மின் திட்டம் - உடன்படிக்கை நேற்று கைச்சாத்துயாழ்ப்பாணத்தின் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவில் மீள்புதுப்பிக்கத்தக்க கலப்பு எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்பமிட்டன.

இந்திய அரசாங்கத்தின் 10.995 மில்லியன் டொலர் – நம் நாட்டு மதிப்பில் சுமாராக 339 கோடி ரூபாய் நிதி மானியத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்வரும் 2025 மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவை தளமாகக் கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன் என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் மூன்று தீவுகளிலும் 530 கிலோ வாட்ஸ் மின்சாரம் காற்றாலை மூலமும், 1,700 கிலோவாட்ஸ் சூரிய சக்தி மூலமும் 2,400 கிலோ வாட்ஸ் பற்றரி சக்தி மூலமாகவும்
2,500 கிலோவாட்ஸ் டீசல் சக்தி மூலமாகவும் உற்பத்த செய்யப்படவுள்ளன.

இதற்கான உடன்படிக்கையில் மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவும் யு – சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன் நிறுவன அதிகாரிகளும் இந்திய தூதுவர் சந்தோஷ ஜா முன்னிலையில் கைச்சாத்திட்டனா்.