தொடரும் ரணில் – சஜித் முரண்பாடு: பிரதமர் வேட்பாளராக கருவை இறக்க திட்டம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாச எம் பிக்கும் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைமை பொறுப்பை ரணில் தொடர்ந்து தனது வசம் வைத்திருத்தல், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பிற்போடல் போன்ற காரணங்களால் அதிருப்தியடைந்துள்ள சஜித் பிரேமதாஸ இந்தச் சந்திப்பைத் தவிர்த்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமர் வேட்பாளராக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க ரணில் ஆலோசித்து வருகின்றமை கட்சிக்குள் புதிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சஜித்துக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களுடன் தனித்தனியே பேச்சு நடத்த ரணில் தீர்மானித்துள்ளார்.நேற்றுமுன்தினம் இரவும் அப்படியான சந்திப்பொன்றில் அவர் ஈடுபட்டாரென அறியமுடிந்தது.