தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை; ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு பொதுத்தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைக்கப்பெற்றது. அதற்காக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நெருக்கடி நிலை நீடிக்கின்றது.

ஜோன் அமரதுங்க, அகிலவிராஜ் காரியவசம்,ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியோர் தேசியப்பட்டியல் வாய்ப்பை கோரிநிற்கின்றனர். இவர்களில் ஒருவருக்கு வழங்கினால் கட்சிக்குள்மோதல் ஏற்படும் என்பதால், ரணிலை பாராளுமன்றம் செல்லுமாறு சிலர் கோரியுள்ளனர்.

இந்நிலையிலேயே ரணில் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.