துமிந்த சில்வா விடுதலை – மரண தண்டனைக் கைதிகள்  உணவுத் தவிர்ப்பு போராட்டம்

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில்  உள்ள மரண தண்டனை கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி சுமார் 74 மரண தண்டனைக் கைதிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதனால் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அதே நேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறும்  அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட 235 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது குறித்து ஏற்கனவே நீதி அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்திற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.