தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை

02 2 தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகைசீனாவின் தரைப்படை, வான்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படையினர் இணைந்து தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை ஒன்றை சீனா கடந்த வியாழக்கிழமை (23) மேற்கொண்டிருந்தது.

தாய்வானின் தனிநாட்டு பிரகடனம் தொடர்பில் பேசுபவர்களுக்கான எச்சரிக்கையும், தண்டனையும் என்ற குறிக்கோளுடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாய்வானின் கட்டளைப் பீடங்களைக் கைப்பற்றுதல், முற்றுகையை ஏற்படுத்துதல் உட்பட பல படைத்துறை ஒத்திகைகளை தாய்வானின் வெளிப்புறமும்இ உட்புறமும் தாம் மேற்கொண்டுவருவதாகவும் இந்த நடவடிக்கை தாயாவானின் விவகாரங்களில் தலையிடும் வெளிநாட்டு சக்திகளுக்கான எச்சரிக்கை எனவும் சீனாவின் படைத்துறைப் பேச்சாளர் லி சீ தெரிவித்துள்ளார்.

சீன படையினரை கண்காணிக்க கடற்படைக் கப்பல்கள், வான்படை விமானங்கள் மற்றும் ஏவுகணைப் படையினரை தாய்வான் அரசு நகர்த்தி வருவதற்கு பதிலடியாகவே இந்த படைத்துறை ஒத்திகை மேற்கொள்ளப்படுகின்றது.

சீனாவில் 1940 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு போரைத் தொடர்ந்து தாய்வான் சுதந்திர மாநிலமாக இயங்கி வருகின்றது. ஆனால் அது அமெரிக்காவுடன் அதிக நெருக்கத்தை பேணிவருகின்றது.

ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள புதிய அரச தலைவர் சீனாவை நோக்கி தனிநாட்டுக்கான அறைகூவலை விடுத்துள்ளது தற்போதைய நிலையை தோற்றுவித்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.