தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு!

Unknown e1725211985797 தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு!

தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (03) செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். இலங்கை அரசு தலைவருக்கான தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியடப்பட உள்ளது.

சிங்கள வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் தமிழப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.