‘தமிழர் சங்கமம் வேல்ஸ்’ மொழியும் பண்பாடும் மூச்சாக..

தமிழ் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ், காடிவ் தமிழ் மன்றம், தமிழ்க் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் வேல்ஸ் சமூகங்கள் இணைந்த தமிழ்ச் சமூகத்தின் பொது தளமே தமிழர் சங்கமம் வேல்ஸ்.

புலம் பெயர்வு தமிழ் மொழி பண்பாடுகளை படிப்படியாக தலைமுறைகளிடமிருந்து அகற்றிவிடும் என்ற யதார்த்தத்தை மாற்றறும் விதமாக தெற்கு வேல்ஸ் தமிழர்கள் தமிழ் மொழி பண்பாடுகளை பேணுகிறார்கள். இளம் தலைமுறையினருக்கு தமிழின் செழுமையை இலக்கிய முதிர்ச்சியை இயல், இசை, நாடக நிகழ்வுகள் ஊடாக வளர்த்து திருக்குறள, பேச்சு போட்டிகள் என நடாத்தி சான்றிதழ்கள் வழங்கி சாதனைகள் படைத்துள்ளார்கள் இங்குள்ள மக்கள்.

தைப்பொங்கல், கண்கட்டி உறி உடைத்தல், மாட்டுக்கு பொட்டு வைத்தல், பொது அறிவுப் போட்டி: இசைப் பாடல்: நாடகம் என களை கட்டியது விழா. தமிழ் பண்பாட்டு உடைகளில் பிள்ளைகளும் பெற்றோரும் பெருமையுடன் வலம்வருவதும் எமது உணவு வகைகளைப் பரிமாறுவதும் விழாவின் சிறப்பம்சமாக உள்ளது.

அனைத்து மக்களதும் பங்குடன் உருவாக்கப்பட்டுள்ள “வேல்ஸ் தமிழர் சங்கமம்”; எனும் அமைப்பு ஊடாக தமிழர் தேசிய நினைவு நாட்களான மாவீரர் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தலஇ; தமிழ்ப் பொதுப் பெருவிழாவான தைப்பொங்கல், போன்றவற்றைக் கொண்டாடுவது வழமையாகி வருகிறது.Picture1 3 'தமிழர் சங்கமம் வேல்ஸ்' மொழியும் பண்பாடும் மூச்சாக..

தமிழின் எழுச்சியும் வளர்ச்சியும் தமிழ்ச் சங்கம் வளர்த்ததால் உயர்வு கண்டது. தமிழின் உயிர்ப்பும் பண்பாட்டுச் சிறப்பும் தொடர்ந்து பேணப்பட வேண்டுமானால் தமிழ் இயல்; இசைஇ நாடக, மேடைகள் பேணப்படவேண்டும் என்ற உண்மை உணரப்பட்டது. எமது இனம் நிலைத்து வாழ வேண்டுமானால் மொழியின் பெருமையை வெளிக்கொணரும் கலைகள் உயிர்வாழ வேண்டும். குலை உயிர்பெற வெண்டுமானால் கலை அரங்கங்கள் திறக்கப்பட வேண்டும்.

செந்தமிழ் இங்கு பிறந்து வாழும் பிள்ளைகளின் நாவில் தேன் சொட்டும்படியாக விளையாடும் காட்சிகள் அடங்கிய சிலப்பதிகாரத்தின் ஒரு பகுதியை தமது நாடகத்தில் தழிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் வேல்ஸ் மாணவர்கள் தமது பத்தாவது ஆண்டு விழாவில் மேடையேற்றினார்கள். இது தெரிவுக்குள்ளாகி லண்டன் சொயாஸ் பல்கலைக்கழக தமிழ் பீடத்தின் அழைப்பில் மீண்டும் மேடையேறவுள்ளது.

இலக்கு நோக்கிய தமிழரின் அடிப்படை வேலைத்திட்டமாக மொழி, கலை, பண்பாட்டுப் பேணலை வேல்ஸ் பிள்ளைகள் ஈடுபாட்டுடன் செய்து வருவது பெரும் ஆர்வத்துக்குரிய செயலாக நோக்கப்படுகிறது. இந்த தமிழர் கங்கமம் போன்ற அமைப்புக்கள் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியலில் இன்றியமையாத தேவை எனவும் ஏனைய பகுதிகளிலும் இந்தச் செயற்பாடுகள் முனைப்புப்பெற வேண்டும்.

-அருண்மொழி-