தமிழரை சாத்தான்களாக சித்தரிக்கின்றது சிறீலங்கா அரசு

இங்கை தபால் திணைக்களம் “தஹா அத்த சன்னிய“ (பதினெட்டு சன்னியர்கள்) என்ற தலைப்பின் கீழ் 18 முத்திரைகளை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதில் தமிழரை அவமானப்படுத்தும் வகையில், “தெமல சன்னிய“ என்ற பெயரில் கரிய நிறமுள்ள ஒருவர் வீபுதிக் குறி, குங்குமப் பொட்டு, தலைப்பாகை போன்ற அடையாளங்களுடன் உள்ள ஒரு சித்திரத்தைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

சித்த ஆயுர்வேத வைத்திய முறையில் சன்னி என்பது ஒரு வகை நோய் என்றும் அதில் 18 வகைகள் உண்டென்றும் சொல்லப்படுகின்றது. போகர் எழுதிய சித்த வைத்திய நூலில் 18 சூலைகள் எனவும் கூறப்படுகின்றது.

ஆயுர்வேத வைத்தியத்தை அங்கீகரிக்கும் வைத்தியமாக ஆக்குவதிலும், அதை அபிவிருத்தி செய்வதிலும் ஆர்வம் காட்டும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்த சிகிச்சை முறையை கௌரவிப்பதற்காக 18 சன்னிகள் பற்றிய முத்திரையொன்றை இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதுபோல இம் முத்திரைகளில் ஒவ்வொரு வகையான நோய்களுக்கும் வெவ்வேறு உருவங்களை அடையாளப்படுத்தும் முகமாக உருவமைக்கப்பட்டுள்ளது. இதில் தெமழ சன்னியா என்ற பெயர் கொண்ட ஓர் உருவமும் அமைந்துள்ளது.

stamp2 தமிழரை சாத்தான்களாக சித்தரிக்கின்றது சிறீலங்கா அரசுஇந்த செயல் அறியாமையாலோ அல்லது யாரின் தூண்டுதலினாலோ செய்யப்பட்டது என்பது அறியப்படவில்லை.  ஆனால் இந்த முத்திரை வெளியிடல் விடயத்தில் தமிழரை அடையாளமாகக் காட்டப்பட்ட முத்திரையின் கீழ் “பாரம்பரிய சிங்களப் பேயோட்டும் சடங்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இனக்குரோதம் காரணமாக வெளியிடப்பட்டுள்ளதாகவே பலரும் பார்க்கின்றனர்.