தபால் மூலம் வாக்களிப்பு ஆரம்பம்- சிங்கள வேட்பாளர்களை புறக்கணிக்கும் தமிழ் மக்கள்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

உள்ளுராட்சிமன்றங்கள்,அரச நிறுவனங்களில் இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் இன்று வாக்குப்பதிவுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 185 தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 11522 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிப்புக்கு
தகுதிபெற்றுள்ளனர்.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமது 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து பல கட்சிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் மேற்கொண்டபோதும், அவை வெற்றி பெறவில்லை எனவும்இ எனவே தமிழ் மக்கள் இன்று (31) இடம்பெறும் தபால் மூலம் வாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமைகளை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என ஐந்து தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

postal vote தபால் மூலம் வாக்களிப்பு ஆரம்பம்- சிங்கள வேட்பாளர்களை புறக்கணிக்கும் தமிழ் மக்கள்எனினும் தான் தமிழ் வேட்பாளருக்கே தனது வாக்கை அளித்துள்ளதாகவும், சிங்கள வேட்பாளர்களை தமிழ் மக்கள் நம்புவது தற்கொலைக்கு ஒப்பானது எனவும் வாக்களிப்பில் பங்குபற்றிய தமிழ் அதிகாரி ஒருவர் எமது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.