மீண்டும் மிலேனியம் சலஞ் உடன்பாட்டை கையில் எடுக்கும் அமெரிக்கா

அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் மற்றும் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க்குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலா பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும் 480 மில்லியன் டொலர்கள் அபிவிருத்தி நிதியைக் கொண்ட மிலேனியம் சலஞ் என்ற உடன்பாடு குறித்தும் அமெரிக்கா தனது அக்கறையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. சிறீலங்காவின் கடல் பாதுகாப்பக்காக அமெரிக்கா 39 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளது.