ட்ரம்பின் வரிவதிப்புக்கு நீதிமன்றம் தடை

உலகில் உள்ள 90 இற்கு மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த தடைகள் சட்டவிரோதமானவை எனவும், அமெரிக்க அதிபர் தனது அதிகாரங்களை தவறாக பயன் படுத்தியுள்ள தாகவும் மூவர் கொண்ட நீதிபதிகள் குழு கடந்த புதன்கிழமை(28) தெரி வித்துள்ளது.
1977 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்துலக அவசர கால பொருளாதார அதிகாரம் என்ற சட்டத்தின் அடிப்படையில் உலக நாடுகள் மீது தன்னிச்சையாக வரிவிதிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு கிடையாது. அவ்வாறு மேற்கொள்வதற்கு அமெரிக்க அதிபருக்கு காங்கிரஸ் சபையின் அனுமதி தேவை என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த ஏப்பிரல் மாதம் உல கில் உள்ள 90 இற்கு மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் 10 விகித வரி உயர்வை கொண்டு வந்திருந்தார். மேலும் சீனா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் மீது மேலதிக வரிகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அமெரிக்க அதிபரின் இந்த வரி விதிப்பினால் அமெரிக்க நிறுவனங்களும், பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அமெரிக்காவின் சிறிய வர்த்தக நிறுவனங்களின் குழு இந்த வழக்கை தொடுத்திருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு 10 வீத வரியை இல்லாது செய்தாலும் 1962 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் சரத்து 232 இன் படி அனுமினியம், இரும்பு மற்றும் வாகனங்கள் மீது போடப்பட்ட 25 வீத வரியை அது நீக்கவில்லை என தெரிவிக் கப்படுகின்றது.
1974 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் 122 ஆம் சரத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் 15 வீத வரியை அவசரகால நிலையை பயன்படுத்தி 150 நாட்களுக்கு மட்டுமே உலக நாடுகள் மீது போட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்துள் ளதாகவும், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிடும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.