ஞாபகமறதி ஏற்படுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

மூளையில் உள்ள கலங்களின் இறப்பினால் மனிதர்களில் ஞாபகமறதி நோய் (Alzheimer’s disease) ஏற்படுகின்றது. இது வயதானவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சியால் இந்த நோய் எப்படி ஏற்படுகின்றது என்ற காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் இந்த நோயை குணப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வயதானவர்களில் மூளையில் உள்ள சில நரம்புக் கலங்கள் தற்கொலை செய்வதால் (Necroptosi) இந்த நோய் ஏற்படுகின்றது. மூளையில் உள்ள கலங்கள் MEG3 என்ற  மூலக்கூறை உற்பத்தி செய்வதால் அந்த மூலக்கூறுகள் கலங்களின் இறப்பை தூண்டுகின்றன. கலங்கள் இறப்பதால் நரம்பு கலங்களுக்கு இடையில் ஏற்படும் இடைவெளி காரணமாக இந்த நோய் ஏற்படுகின்றது.

கலங்களின் இழப்பின் மூலம் வழமையாக எமது உடல் தனக்கு தேவையற்ற கலங்களை அழிப்பதுண்டு. எனினும் நாம் என்ற மூலக்கூறை தடுப்பதன் மூலம் கலங்களின் தற்கொலையை தடுக்க முடியும் அது இந்த நோக்கான சிகிச்சை முறையாக அமையலாம் என பிரித்தானியாவின் Dementia Research நிறுவனத்தை சேர்ந்த போராசிரியர் Bart De Strooper தெரிவித்துள்ளார்.